எப்போதுமே பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக அவர்களின் பிரதிநிதியாக பேசுபவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவியும். அந்த வகையில் சில தினங்களாக தமிழக மக்கள் பாராட்டும் ஒரு நல்ல மனிதராக நடிகர் விஜய் சேதுபதி மாறியிருக்கிறார். லீடர்ன்னா என்ன என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் 30 நொடிகள் பேசிய ஒரு கருத்து இன்று தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
தமிழக அரசியல் களத்தில் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்த மக்களில் ஒரு தரப்பினர், திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம் என்று முடிவு செய்து புதிதாக அரசியல் களத்துக்கு வந்த நடிகர் விஜயின் தவெக கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் முதல்வரான பிறகு விஜய், மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஒருவராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக சட்டசபையில் பேசாமல் மௌனமாக இருப்பது, பேச சொன்னால் உடனே திமுகவினரை அசிங்கமாக விமர்சனம் செய்து பேசுவது குறிப்பாக உடல் மொழி சைகைகளால் நடித்து காட்டுவது என்று மக்களின் கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி பேசிய ஒரு கருத்து, தவெக வினரை கதற வைத்திருக்கிறது.
இதுகுறித்து பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, உங்களுக்கு கேட்கிறதுக்கு ஒரு ஆள் இல்லாட்டி அவர் எப்படி ஒரு முன்னேற்ற பாதைக்கு கொண்டு போக முடியும்? தேர்ந்தெடுக்க ஒரு கூட்டம் இருந்தா ஆமா நான் கெட்டவன். எனக்கு மக்களை கொல்ல உரிமை இருக்குன்னு ஆகிடுமா?
ரெண்டு சொட்டு கண்ணீருக்கு மயங்கிடுவீங்களா? அப்புறம் எதுக்கு கருத்து வைக்கிறீங்க? அங்க நடக்குற விஷயம் பர்சனல் இல்ல. ஒரு பொறுப்புல இருக்கீங்க. அது மேல ஒரு அழுத்தம் இருக்குன்னா அதுக்கு கேள்வி கேட்டா பதில் சொல்ல வேண்டியது உங்களோட வேலை. அதுக்கு அழுது சமாளிக்க கூடாது.
அழுகிற ஒருத்தனுக்கு ஆதரவா போக கூடாதுன்னு சொல்லல. ஆனா அது வழியா நீங்க எல்லாம் ஜோக்கரா தெரிவீங்க – பிக்பாஸில் விஜய் சேதுபதி பேச்சை பகிர்ந்து, கரூர் சம்பவத்தில் குடும்பத்தினரை வீட்டில் சென்று பார்க்காமல் சென்னைக்கு வரவழைத்து 2 சொட்டு கண்ணீர் விட்டவரின் சாயத்தை வெளுத்து தொங்க விட்ட விஜய் சேதுபதி என்று ப்ளு சட்டை மாறன் அந்த பதிவில் விஜய் சேதுபதியை பாராட்டியிருக்கிறார்.





