இன்றைய நட்சத்திர ஹீரோக்கள் படம் என்றாலே அது கமர்ஷியல் என்ற பெயரில் வன்முறை நிறைந்த படங்களாக தான் இருக்கின்றன. படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை 1000 பேரையாவது ஹீரோ கொன்று குவித்தால் தான் அவர் பெரிய ஹீரோ என்ற ஒரு நம்பிக்கை அந்த படத்தை இயக்கும் இயக்குனர்களுக்கு உள்ளது.
ஒரு காட்சியில் ஹீரோ வந்தால் 100 பேரையாவது சுட்டுக் கொன்றுவிட்டோ அல்லது வெட்டி சாய்த்து விட்டோ சென்றால் தான் அவர் பெரிய ஹீரோ. கதை திரைக்கதை எல்லாம் தாண்டி படத்தின் ஹீரோவை கொம்பாதி கொம்பனாக காட்டும் வேலை தான் இயக்குனர்களுக்கு மிக முக்கியமாக உள்ளது.
அப்படிதான் இன்றைய பெரும்பாலான ஹீரோக்களின் படங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கனவே வெளியான ஜெயிலர் படத்தில் பல வன்முறை காட்சிகள் இருந்தன. ரத்தம் தெறிக்கும் காட்சிகள் படம் முழுவதும் வந்தன. இப்போது உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்திலும் முந்தைய படத்தை விட ஏகப்பட்ட வன்முறை காட்சிகள் படம் முழுவதும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முந்தைய படம் கூலி வெளியாகி பெரிய ஏமாற்றத்தை தந்தது. படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்த இந்த படத்துக்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியது. அது அந்த படத்துக்கு பெரிய பின்னடைவாக மாறியது. மனைவி பிள்ளைகளுடன் குடும்பத்துடன் யாரும் தியேட்டருக்கு வர முடியாத ஒரு சூழல் உருவானது.அதனால் இந்த முறை அந்த பாதிப்பு வரக்கூடாது என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார்.
ஜெயிலர் 2 படத்தில் முடிந்த வரை வன்முறை காட்சிகளை குறைத்து காட்டுங்கள். இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று இயக்குனர் நெல்சனிடம் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். ஏனெனில் கூலி படம் போல ஜெயிலர் 2 படமும் பிளாப் ஆகி விடக்கூடாது என்பதில் ரஜினி மிகவும் உஷாராக இருந்து வருகிறார்.
அதுமட்டுமின்றி இப்போது நடிகர் ரஜினிகாந்த் மத்திய இணை அமைச்சர் எல் முருகனிடமும் இதுபற்றி பேசியிருக்கிறார். ஜெயிலர் 2 படம் வெளியாகும் போது சென்சார் போர்டு தரப்பில் ஏ சா்பிடிகேட் தராத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்த வரை இந்த விஷயத்தில் எனக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்று எல் முருகனிடம் ரஜினிகாந்த் சமீபத்தில் பேசியதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





