- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பமே இப்படி ஒரு கணிசமான லாபமா? தமிழ் சினிமாவில் ரூ. 1000 கோடி வசூலிக்கும் முதல்...

ஆரம்பமே இப்படி ஒரு கணிசமான லாபமா? தமிழ் சினிமாவில் ரூ. 1000 கோடி வசூலிக்கும் முதல் படம் ஜெயிலர் 2 தானா? – லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. அனிருத் இசையமைத்து இருந்தார். சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் என்று விமர்சித்த நிலையிலும் இந்த படம் ரூ. 600 கோடி வசூலை அள்ளியது.

தொடர்ந்து அப்போதே ஜெயிலர் 2 படம் உருவாகும் என்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்த் இதுவரை நடித்த அவரது படங்களில் 2ம் பாகம் படத்தில் அவர் நடித்தது ஜெயிலர் 2 படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 படம் ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ஜெயிலர் 2 பிஸினஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 350 கோடி. இதில் ரஜினிகாந்த் சம்பளம் ரூ. 125 கோடி. இதுதவிர அவருக்கு பிராபர்டி ஷேர் தருவதாகவும் பேசப்பட்டுள்ளது. படத்தின் லாபத்தை பொருத்து இன்னும் பல கோடி ரூபாய் ரஜினிக்கு கிடைக்கலாம்.

இதுவரை நடந்த ஜெயிலர் 2 வியாபாரத்தில் தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் என்ற வகையில் 600 கோடி ரூபாய் வியாபாரம் நடந்துள்ளது. டிஜிட்டல் ரைட்ஸ் சாட்டிலைட் ரைட்ஸ் ஆடியோ ரைட்ஸ் என்ற நான் தியேட்டரிக்கல் வியாபாரத்திலும், தியேட்டர்களில் வினியோகம், வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் என்ற வகையிலும் 350 கோடி ரூபாய் வரை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு லாபம் கிடைத்துள்ளது.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஜெயிலர் 2 படம் தியேட்டர்களில் ரசிகர்களின் அமோகமான ஆதரவு வரவேற்பை பெறும் பட்சத்தில் இந்த படம் தமிழ் சினிமாவில் முதன் முறையாக ரூ. 1000 கோடி வசூலை எட்டிய படம் என்ற பெருமையை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தெலுங்கு கன்னடம் இந்தி படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை பலமுறை கடந்த நிலையில் தமிழ் சினிமா அந்த சாதனையை இதுவரை செய்யவில்லை.

ஆனால் வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக ஜெயிலர் படம் போலவே ஜெயிலர் 2 படத்திலும் மிக அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதனால் அந்த படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டால் பேமிலி ஆடியன்ஸ் வருகை குறைந்து வசூல் பாதிக்கப்படும் சூழலும் நிலவுகிறது. எனினும் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை ரஜினி படம் செய்ய வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்