ஒரு திரைப்படம் ஜெயிப்பது எப்போதுமே ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. நல்ல கதை அம்சம் கொண்ட கதைக்களம் கொண்ட படங்களை எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் கைவிடுவதில்லை. சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் கதை உணர்வுபூர்வமாக இருக்கும் பட்சத்தில் அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
அப்படி பல படங்கள் தமிழ் சினிமாவில் ஜெயித்திருக்கின்றன. அந்த வரிசையில் லப்பர் பந்து குடும்பஸ்தன் பார்க்கிங் டூரிஸ்ட் ஃபேமிலி காக்கா முட்டை குட்நைட் யூத் மாமன் என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதே நேரத்தில் கதைக்களம் ரசிகர்களை திருப்தி படுத்தாத பட்சத்தில் அந்த படம் தோல்வி அடைவதை யாராலும் தடுக்க முடியாது.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்து வெளியாகும் படங்கள் பெரும்பாலும் தோல்வியை தழுவுகின்றன. குறிப்பாக ஜப்பான் மெய்யழகன் வா வாத்தியார் ஆகிய படங்கள் படு தோல்வி அடைந்த நிலையில் கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான படம் சர்தார் 2. கடந்த 10ம் தேதி வெளியானது.
இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற சர்தார் படத்தின் இரண்டாம் பாகமாக உருவானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த மண்டாடி படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 80 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
இந்த நிலையில் சர்தார் 2 படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அதே நேரத்தில் நடிகர் கார்த்தி ஸ்காட்லாண்டில் தனது அண்ணன் சூர்யா – ஜோதிகா திருமண விழாவில் கலந்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர் நடித்த சர்தார் 2 படம் மிகப்பெரிய தோல்வியடைந்து விநியோகஸ்தர்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நடிகர் கார்த்தி இப்படி வெளிநாட்டில் சந்தோஷமாக என்ஜாய் செய்வது அவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் 2 படம் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக நடிகர் கார்த்தி 10 கோடி ரூபாய் தந்து அந்த பிரச்சனையை தீர்த்து விட்டு தான் வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு விநியோகஸ்தர்கள் நடிகர் கார்த்தி மீது வீண் பழி போடுவது எந்த விதத்தில் நியாயம்? படத்தின் மோசமான தோல்விக்கு படத்தின் இயக்குனர் தானே காரணம் என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.





