- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்துமே சும்மாதான்... ஆனால் தயாரிப்பாளரிடம் இதைக் கேட்டால் மட்டும்தான் பிரச்சனை...

என்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்துமே சும்மாதான்… ஆனால் தயாரிப்பாளரிடம் இதைக் கேட்டால் மட்டும்தான் பிரச்சனை வருகிறது… யோகிபாபு வேதனை…

- Advertisement -

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகர்களில் தற்போது உச்சத்தில் இருப்பவர் யோகி பாபு. நகைச்சுவை மட்டுமல்ல, கதாநாயகனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் யோகி பாபு சிறப்பாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக அவர் பணிபுரிந்து வந்தார்.

பின்னர் அங்கிருந்து வெள்ளிதிரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த யோகிபாபுவுக்கு, யாமிருக்க பயமேன் திரைப்படம் நல்ல திருப்புமுனையை கொடுத்தது. பன்னி மூஞ்சி வாயன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபுவை, படம் முடிந்த பிறகும் மக்கள் ஞாபகம் வைத்திருந்தனர். இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் பேசப்பட்ட யோகி பாபு, கொஞ்சம் கொஞ்சமாக தனது கேரியரை வளர்த்துக் கொண்டார்.

இருப்பினும் அவரை நகைச்சுவை நாயகனாக அந்தஸ்து கொடுத்தது காக்கா முட்டை திரைப்படம் தான். இரண்டு சிறுவர்களைப் பற்றிய படம் என்றாலும், யோகி பாபு – ரமேஷ் திலக் வரும் காட்சிகள் திரையரங்குகளில் சிரிப்பலை எழ செய்தன. எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல என யோகி பாபு அடித்த கவுன்டர், இன்னும் மீம்ஸ் கிரியேட்டர்களில் டெம்ப்ளேட் ஆக உள்ளது.

இப்படி அடுத்தடுத்த படங்கள் யோகி பாபுவை, நகைச்சுவை நாயகனாக்க, அவரை கதாநாயகனாக்கியது மண்டேலா திரைப்படம் தான். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில், இளிச்சவாயன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார் யோகி பாபு. மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படத்திலும் யோகி பாபுவின் நடிப்பு பேசப்பட்டது.

சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில், நகைச்சுவையில் சிக்ஸர் அடித்து இருந்தார் யோகி பாபு. காட்சிக்கு காட்சி யோகி பாபு போட்ட பேட்ச் ஒர்க் பணிகளால், மாவீரன் திரைப்படம் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியது. இது ஒரு பக்கம் இருக்க, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் யோகிபாபு மீது புகார் அளித்து இருந்தார். அவர் தன்னிடம் படத்திற்கான அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொண்டு, நடிக்க வருவதில்லை என்று பேசியிருந்தார்.

இந்த புகாருக்கு தற்போது யோகி பாபு பதிலளித்துள்ளார். லக்கி மேன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நான் நடிக்கும் சில படங்களில், எனக்கென வெறும் நான்கு காட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு போஸ்டரில் எனது படத்தை போடுகிறார்கள். இதைப் பார்த்துவிட்டு திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் ஏமாந்து தானே போவார்கள். இதை கேட்டால் அங்கு பிரச்சனை ஏற்படுகிறது. நான் ஷூட்டிங் வராமல் எங்கே போகப் போகிறேன். என்ன பத்தி வர்ற செய்திகள் அனைத்துமே சும்மாதான். நான் கதை கேட்டு பண்றத விட அடுத்தவங்க கஷ்டத்தை கேட்டு தான் படம் பண்றேன் என்று பேசினார்.

சற்று முன்