- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் திரைக்கு வரும் சிவாஜி கணேசன் நடித்த மாஸ்ஹிட் படம் - நடிகர் திலகம் பிறந்த...

மீண்டும் திரைக்கு வரும் சிவாஜி கணேசன் நடித்த மாஸ்ஹிட் படம் – நடிகர் திலகம் பிறந்த நாளில் வரும் 1ம் தேதி டிரெய்லர் வெளியீடு!

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர். அதில் நிறைய பக்தி படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் மிகப்பெரிய மாஸ் ஹிட் ஆன படம் திருவிளையாடல். இந்த படம் சிவாஜி கணேசனுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த படம்.

இந்த படத்துக்கு பிறகு சிவபெருமான் என்றால் சிவாஜி கணேசன்தான் மக்களுக்கு நினைவுக்கு வரும் அளவுக்கு சிவனாக அவர் நடித்திருந்தார்.திருவிளையாடல் படத்தில் சாவித்திரி தேவிகா டிஎஸ் பாலையா நாகேஷ் முத்துராமன் கேபி சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த படத்தில் நக்கீரர் கேரக்டரில் படத்தின் இயக்குனர் ஏபி நாகராஜனே நடித்திருந்தார். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா, என்ற அந்த காமெடி காட்சியில் நாகேஷ் நடிப்பும் சிவாஜி நாகேஷ் பேசுகிற டயலாக்கும் இன்றும் டிரண்டிங் உள்ளது. இதில் ஒரு கம்பீரமான சிவபெருமான் தோற்றத்தில் சிவாஜி கணேசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

திருவிளையாடல் படத்துக்கு கேவி மகாதேவன் இசையமைத்து இருந்தார். பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். ஏபி நாகராஜன் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். மிக விரைவில் திருவிளையாடல் படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஸ்ரீ பாலிவிநாயகர் பிக்சர்ஸ் சார்பில் லதா ரி ரிலீஸ் செய்ய உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் வருகிற 1ம் தேதி சிவாஜி கணேசனின் 99வது பிறந்த நாளில் திருவிளையாடல் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சென்னையில் உள்ள காசினோ தியேட்டரில் நடக்கும் டிரெய்லர் ரிலீஸ் விழாவில் படத்தின் இயக்குனர் ஏபி நாகராஜன் மகன் பரமசிவம் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நடிகர்கள் ஒய்ஜி மகேந்திரா இளவரசு நடிகை வடிவுக்கரசி அண்ணாதுரை கண்ணதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல புராண படங்களில் நடித்திருக்கிறார். கந்தன் கருணை திருவிளையாடல் சரஸ்வதி சபதம் திருவருட் செல்வர் திருமால் பெருமை ஆதி பராசக்தி என பல படங்கள் நடித்திருக்கிறார். அதிலும் திருவிளையாடல் படம்தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாகும். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

சற்று முன்