- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கஸ்தூரி கூறியதாவது, தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஆண்டாண்டு காலமாக நடக்கக்கூடிய விஷயம். ஆனா ஒரு நடிகன் எப்படி அரசியல் கற்றுக்கொள்ளணும் இப்படி அரசியல் செய்யணும் அப்படிங்கிறதை விஜயகாந்த் சார் அவர்களை தான் நான் சொல்லுவேன். நான் யாரையும் குறைத்து சொல்லலே. எம்ஜிஆர் என்டிஆர் மாதிரி பெரிய முன் உதாரணங்கள் இருக்காங்க. ஆனால் அவங்க எல்லாரையும் விட தலைமை பண்பில் விஜயகாந்த் மாதிரி யாருமே வர முடியாது. ஷூட்டிங் ஸ்பாட்டுல அவரால் லஞ்ச் சாப்பிட முடியாது. ஏனென்றால் யாராவது உதவி கேட்டு வருவாங்க. இவரும் உதவி பண்ணிக்கிட்டே இருப்பார். யாருக்கும் அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார் என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.





