- Advertisement -
Homeபொழுதுபோக்குசேரன் இயக்க உள்ள தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவரின் பயோபிக், அதுவும் அந்த டாப்...

சேரன் இயக்க உள்ள தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவரின் பயோபிக், அதுவும் அந்த டாப் நடிகர்தான் ஹீரோவாம், யார்ன்னு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க

- Advertisement -

இந்திய சினிமாவை பொறுத்தவரை பயோபிக்குகளுக்கு பஞ்சமே இல்லை. பல தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இங்கே படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரியார், காமராஜர், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் சேரன், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளாராம். இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்பது பலரும் அறிந்த ஒன்றே.

- Advertisement -

“பாரதி கண்ணம்மா”, “பொற்காலம்”, “வெற்றிகொடிகட்டு”, “ஆட்டோகிராஃப்”, “தவமாய் தவமிருந்து” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை சேரன் இயக்கியிருக்கிறார். மேலும் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் கூட “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில்தான் தற்போது தமிழகத்தின் ஒரு முக்கியமான அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளாராம்.

- Advertisement -

அதாவது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றைத்தான் சேரன் திரைப்படமாக எடுக்க உள்ளாராம். இத்திரைப்படத்திற்காக சேரன், ராமதாஸ் தரப்பு ஆட்களிடம் மட்டுமல்லாது ராமதாஸ் மீது விமர்சனம் உள்ள எதிர் அணியில் இருக்கும் ஆட்களிடமும் கருத்துகளை கேட்டு வருகிறாராம். ஆதலால் இத்திரைப்படம் வெறுமனே ராமதாஸின் புகழ் பாடும் திரைப்படமாக மட்டும் இல்லாமல், பல குறை நிறைகளை சேர்த்தே படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இதில் ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், இத்திரைப்படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க உள்ளாராம். சரத்குமார் இத்திரைப்படத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகராக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது கூடுதல் தகவல்.

- Advertisement -

சற்று முன்