- Advertisement -
Homeபொழுதுபோக்குதேடி வந்த வாய்ப்பை நிராகரித்த நடிகை திவ்யா துரைசாமி, அதுக்கெல்லாம் நான் சரிபட்டு வரமாட்டேன்னு வடிவேலு...

தேடி வந்த வாய்ப்பை நிராகரித்த நடிகை திவ்யா துரைசாமி, அதுக்கெல்லாம் நான் சரிபட்டு வரமாட்டேன்னு வடிவேலு பாணியில் சொல்லி இருக்கிறாரே? – என்னம்மா நீங்க இப்படி பண்றீகளேம்மா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் திவ்யா துரைசாமி. இவர் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

இவர் தமிழ்நாட்டு பெண், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையாக சினிமாவில் வருவதற்கு முன்பு, செய்தி வாசிப்பாளராக பணி செய்திருக்கிறார். இதுவரை திவ்யா துரைசாமி எதற்கும் துணிந்தவன், குற்றம் குற்றமே, மதில், சஞ்சீவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் நடத்தப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் திவ்யா துரைசாமி பங்கேற்றுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள வாழை படத்திலும் திவ்யா துரைசாமி முக்கிய கேரக்டரில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வாழை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை பார்த்த தமிழ் சினிமா சார்ந்த நடிகர்களும், இயக்குனர்களும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் இந்த முறை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் தவிர்க்க முடியாத சில காரணங்களால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். மேலும் வருகிற அக்டோபர் மாதம் துவங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனின் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் வெளிவர துவங்கியிருக்கின்றன.

அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க நடிகை திவ்யா துரைசாமிக்கு அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள நடிகை திவ்யா துரைசாமி, நான் ரொம்ப சீரியஸான ஆள். ஜாலியா என்கிட்ட பேசினால், நானும் ஜாலியாக பேசுவேன். இல்லை என்றால் சீரியஸாக இருப்பேன். அது எனக்கு செட் ஆகாது. 100 நாள் ஒரே வீட்டில் என்னால் இருக்க முடியாது. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட போது, முடியாது என்று கூறிவிட்டேன், என்று அவரே தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்