- Advertisement -
Homeபொழுதுபோக்குஓவர் ஆட்டம் போட்ட விஜய் ரசிகர்கள்.. செம ஆப்பு வைத்த ரோகிணி தியேட்டர்.. கடைசியில் இப்படி...

ஓவர் ஆட்டம் போட்ட விஜய் ரசிகர்கள்.. செம ஆப்பு வைத்த ரோகிணி தியேட்டர்.. கடைசியில் இப்படி ஆகிப்போச்சே

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி நாளை தினத்தை தீபாவளி போல் கொண்டாடுவதற்கு விஜய் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.டிக்கெட் புக்கிங்கும் தொடங்கி படு ஜோராக நடந்துவருகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு 100க்கு 98 தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக ஒரு தகவல் உலாவுகிறது.

படத்தை சுற்றி இப்படி ஒருபக்கம் நல்ல விஷயங்கள் நடந்தாலும் மறுபக்கம் பிரச்னை சுற்றிக்கொண்டே இருக்கிறது. முதல் சிங்கிளில் ஆரம்பித்த பிரச்னை அடுத்ததாக ட்ரெய்லருக்கும் தொடர்ந்தது. சரி அப்டேட்டுகளோடு பிரச்னை முடிந்துவிடும் என்று யோசித்த படக்குழுவுக்கும், ரசிகர்களுக்கும் டிக்கெட் ரூபத்திலும் தியேட்டர் ரூபத்திலும் பிரச்னை வந்திருக்கிறது.

- Advertisement -

அதாவது லியோ பட டிக்கெட் அநியாய விலைக்கு விற்கப்படுவதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது. இதன் காரணமாக தியேட்டர்களிடம் 80 சதவீதம்வரை பங்கு தொகை கேட்டது. ஆனால் 60 சதவீதம்வரைதான் கொடுப்போம் என தியேட்டர் தரப்பு கூறுகிறது. எனவே தமிழ்நாட்டில் ஒரு சில தியேட்டர்கள் லியோவை திரையிட வேண்டாம் என இதுவரை முடிவு செய்திருக்கின்றன.

அதன்படி நேற்று மாலை திருச்சி சாந்தி சினிமாஸ் வெளியிட்ட அறிவிப்பில் சில காரணங்களால் லியோ திரைப்படத்தை எங்களால் திரையிட முடியவில்லை என்று கூறியிருந்தது. தற்போது ரோகிணி தியேட்டரும் ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி ரோகிணி தியேட்டர் தனது வாசலில் ஒரு அறிவிப்பு பலகையை வைத்திருக்கிறது. அதில் லியோ படம் இங்கு திரையிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் ஒரு பெரிய ஹீரோவின் படம் அதிலும் விஜய்யின் படம் என்றால் ரோகிணி தியேட்டர் களைகட்டும். ஆனால் இப்போது அந்த தியேட்டர் இந்த முடிவை எடுத்திருப்பதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தியேட்டரின் இந்த முடிவுக்கு விஜய் ரசிகர்கள்தான் காரணம் என கூறப்படுகிறது.

அதாவது லியோ படத்தின் ட்ரெய்லர் ரோகிணி தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது விஜய் ரசிகர்கள் தியேட்டரின் இருக்கைகளை நாசம் செய்தனர். அதனால் தியேட்டர் நிர்வாகத்துக்கு பத்து லட்சம் ரூபாய்வரையில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. எனவேதான் ரோகிணி இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக திரைத்துறை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்