இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ. 340 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. அதன்பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படமும் ரூ. 260 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் சீன் என்ற படம் உருவாகியுள்ளது. மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு சீன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு குழப்பத்தை தந்துள்ளது. மேலும் சூர்யா கேரக்டர் பெயர் சீனிவாசன் என்பதால் அதன் சுருக்கம்தான் சீன் என்றும் ஒரு தகவல் வெளியானது.
ஆனால் தற்போது லேட்டஸ்ட் ஆக வேறு ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. சீன் படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் பார்வையற்ற ஒரு விசாரணை அதிகாரியாக அவர் நடித்திருப்பதாக தெரிய வருகிறது. இதுதான் ரசிகர்களை மேலும் குழப்பத்தில் தள்ளியுள்ளது.
படத்தில் சில காட்சிகளில் மட்டும் சூர்யா பார்வையற்றவராக வருகிறாரா? அல்லது படம் முழுக்கவே அதுதான் அவரது கேரக்டரா? கண் பார்வை இல்லாத அவர் எப்படி விசாரணை நடத்துவார்? படத்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு சூர்யா பார்வையற்றவர் எனத் தெரியுமா? அல்லது படம் பார்க்கிற ரசிகர்களுக்கு அவர் பார்வை உள்ளவராக காட்டப்படுவாரா என பல கேள்விகள் உள்ளது.
இந்த ஆண்டில் வெளியான சூர்யாவின் படங்கள் கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய 2 படங்களும் வெற்றிப் படங்களாக உள்ளன. இதையடுத்து தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள சீன் படமும் பெரிய வெற்றியை பெற்றால் ஒரே ஆண்டில் ஹாட்ரிக் சக்சஸ் என்ற சாதனையை நடிகர் சூர்யா படைத்து விடுவார். அதனால் சீன் படமும் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே பார்வையற்ற கேரக்டரில் சில ஹீரோக்கள் நடித்த படங்கள் சொதப்பி இருக்கின்றன. நடிகர் கமல்ஹாசன் நடித்த 100வது படம் ராஜபார்வை பெரிய வெற்றியை பெறவில்லை. சில படங்களில் சில காட்சிகளில் ஹீரோக்கள் பார்வையற்றவராக இருந்தாலும் பிறகு படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் அவர் பார்வைத்திறன் பெற்று விடுவது போல் காட்டி விடுவார்கள். இந்த படம் எப்படி இருக்கப் போகிறது என்பதில் சூர்யா ரசிகர்களுக்கு பலத்த குழப்பம் நீடிக்கிறது





