- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்டிப்பா நான் மீசையை எடுத்துக்கறேன், தில்லு இருந்தா அதை மட்டும் காட்டச் சொல்லுங்க - ...

கண்டிப்பா நான் மீசையை எடுத்துக்கறேன், தில்லு இருந்தா அதை மட்டும் காட்டச் சொல்லுங்க – லியோவுக்கு மீண்டும் சவால் விட்ட மீசை ராஜேந்திரன்

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் மீசை ராஜேந்திரன், ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர். இதுவரை 270க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். டிவி சீரியல்கள், விளம்பரங்களிலும் மீசை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். நடிகர் விஜயகாந்த் அபிமானியான இவர், தேமுதிக கட்சியில் நிர்வாகியாகவும் உள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கவந்த காலகட்டத்தில், செந்தூரபாண்டி என்ற படத்தில் விஜயை தனது தம்பியாக நடிக்க வைத்து, அதன்மூலம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தை விஜயகாந்த் ஏற்படுத்தி தந்தார். ஆனால், அந்த நன்றி கூட இல்லாமல், உடல்நலம் சரியில்லாத விஜயகாந்த்தை, ஒருமுறை கூட நேரில் சந்தித்து விஜய், நலம் விசாரிக்கவில்லை.என பரபரப்பாஜ குற்றச்சாட்டை எழுப்பியவர்தான் இந்த மீசை ராஜேந்திரன்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகள், பஞ்சாயத்து காட்சிகள், சண்டை காட்சிகள் என பல படங்களில் மீசை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். திருப்பாச்சி படத்தில், விஜய் நடித்த ஒரு காட்சியிலும், கிராமத்த தலைவராக மீசை ராஜேந்திரன் நடித்திருக்கிறார் என்றாலும், விஜய் குறித்த குற்றச்சாட்டுகளை, நேர்காணல்களில் பகிரங்கமாக கூறி வருகிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மீசை ராஜேந்திரன், ரஜினி நடித்த ஜெயிலர் படம், 5 வாரங்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடியது. ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக வந்து குடும்பத்துடன் படம் பார்த்தனர். படம் பார்த்தவர்களே மீண்டும் மீண்டும் வந்து பார்த்து, ஜெயிலர் படத்தை ரசித்தனர்.

- Advertisement -

ஆனால், லியோ திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் சில தினங்களிலேயே ரசிகர் கூட்டம் இல்லை. ரிபீட் ஆடியன்ஸ் எல்லாம் லியோ படத்துக்கு நினைத்துக்கூட பார்க்க முடியாது. எல்சியு எல்சியு என்று போனவர்கள் எல்லாம் ஐசியுவுக்கு போக வேண்டிய நிலையில்தான், இந்த படம் மோசமாக இருக்கிறது.

லியோ படத்தின் வசூல் குறித்த உண்மை நிலவரங்கள் இதுவரை இல்லை. வருகிற மார்ச் மாதத்தில், லியோ படத் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யும் லியோ படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை எனக்கு காட்டச் சொல்லுங்கள். அதன்படி லியோ படம், ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை தாண்டி இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் லேசரில் என் மீசையை கண்டிப்பாக எடுத்து விடுகிறேன், என மீண்டும் சவால் விட்டிருக்கிறார் நடிகர் மீசை ராஜேந்திரன்.

- Advertisement -

சற்று முன்