தமிழ் சினிமாவில் இயக்குனர் இராம நாராயணன் இயக்கிய நன்றி என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அர்ஜூன். முதல் படமே நல்ல அடையாளத்தை அவருக்கு கொடுத்தது. அதன்பிறகு தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகராக அர்ஜூன் மாறினார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஆக்சன் கிங் அர்ஜூன் இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் ஜெய்ஹிந்த் கர்ணா முதல்வன் ஏழுமலை உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களாக இருந்தன. நடிகராக மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளராகவும் அவர் உள்ளார்.
சமீப காலமாக அவர் சில படங்களில் வில்லன் கேரக்டரிலும் சில படங்களில் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அர்ஜுன் அபிராமி பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
நடிகர் அர்ஜூனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த 2024ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் தொழில் அதிபராக மாற வேண்டும் என்பதே ஆசை.
எனவே கடந்த 2023ம் ஆண்டு முதல் இயற்கை சூழலுக்கு உகந்த ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி அதை அவர் வெற்றிகரமாக நிர்வகித்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் அர்ஜூனின் இளைய மகன் அஞ்சனா தனது நீண்ட நாள் காதலரான இஷாய் என்பவரை வரும் 18ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
அவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கோமா ஏரிக்கரையில் கடந்த ஆண்டு ஜனவரி 21ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வருகிற 18ம் தேதி இஷாய் அஞ்சனா திருமணம் நடைபெற உள்ளது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளும் எளிய மற்றும் தனிப்பட்ட நிகழ்வாக இந்த திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





