தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஏற்கனவே விடுதலை விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இதில் விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி படத்தின் கதாநாயகனாக இருப்பார். சில காட்சிகள் மட்டுமே விஜய் சேதுபதி அந்த படத்தில் வருவார்.
ஆனால் விடுதலை 2 படத்தில் முழுக்க முழுக்க விஜய் சேதுபதி தான் ஹீரோவாக இருந்தார். அந்த படத்தில் நடிகர் சூரிக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் தாணு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் அரசன் என்ற படத்தை இயக்குனர் வெற்றிமாறன் டைரக்ட் செய்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வருகிறது. இதில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். ஆனால் பல மாதங்களாக அவர் அவ்வப்போது கால்ஷீட் தந்தும் இயக்குனர் வெற்றிமாறன் அந்த கால்ஷீட்டை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே விஜய் சேதுபதி அரசன் படத்துக்கு கால்சீட் கொடுத்ததால் அந்த நாட்களில் கமிட் ஆன மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது அரசன் படத்திலிருந்து விலகும் முடிவுக்கு நடிகர் விஜய் சேதுபதி வந்திருப்பதாக லேட்டஸ் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இன்னும் அரசன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது. ஆனால் அதில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய நாட்கள், கால்ஷீட் தேதிகள் என்பதில் ஒரு தெளிவான திட்டமிடல் இல்லாத சூழல் உள்ளது.
இப்படி அடிக்கடி விஜய் சேதுபதி கால்ஷீட் தருவதும் அது காரணமின்றி ரத்து செய்யப்படுவதும் பிறகு விஜய் சேதுபதி வேறு படங்களில் நடிக்க முடியாமல் தடைபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பத்தா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இதனால் விஜய் சேதுபதிக்கு பல இயக்குனர்கள் பல தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்குமாறு தேடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அரசன் படத்தில் பல மாதங்களுக்கு கால்ஷீட் தந்து கொண்டே இருந்தால் மற்ற படங்களில் கமிட் ஆகி நடிக்க முடியாது. ஏனென்றால் ஒரே மாதிரியான கெட்அப்பில் விஜய் சேதுபதி நடிப்பதில்லை. அரசன் படத்திற்காக மற்ற படங்களை இழக்க வேண்டிய சூழல் தொடர்வதால் அரசன் படத்திலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மிக விரைவில் இந்த அறிவிப்பை விஜய் சேதுபதியே வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.





