- Advertisement -
தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவர் நானி. தி பேரடைஸ் படத்தின் மூலம் அதிக பட்ஜெட் மற்றும் படப்பிடிப்பு தாமதம் தொடர்பான விமர்சனங்களை சந்தித்த நடிகர் நானி, தற்போது தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் ப்ளடி ரோமியோ படத்திற்காக பட்ஜெட் மற்றும் திட்டமிடலில் நானி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். லண்டன் ஷெட்யூல் உள்ளிட்ட பல பெரிய பிளான்கள் உள்ளதால் முந்தைய தவறுகளை திருத்தி படத்தை நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டிய பெரிய பொறுப்பு நானிக்கு ஏற்பட்டுள்ளது.





