- Advertisement -
சமீபகாலமாக அரசியல் இயக்கம் துவங்கும் திட்டத்தில் நடிகர் தனுஷ் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்ப அவரது பேச்சும் செயல்பாடும் இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது. இந்த சூழலில் நடிகர் தனுஷின் ரசிகர் நற்பணி மன்றங்கள் இனிமேல் நடிகர் தனுஷ் நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்டுள்ளது. கோவையில் இன்று நடந்த நடிகர் தனுஷ் ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் தனுஷின் ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் ஏராளமான பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





