தமிழ் சினிமாவில் தற்போதைக்கு நாள்தோறும் பேசிக் கொண்டிருப்பது என்னவென்றால் அது நிச்சயம் லியோ திரைப்படத்தை பற்றி ஆகத்தான் இருக்கும். விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருப்பதால், இவர்களுக்கு லோகேஷ் கனகராஜ் என்ன கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார் என்ற பேச்சும் நாளுக்கு நாள் எழுந்து வருகிறது. படத்தில், சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்திலும், அர்ஜுன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
இந்த தாஸ் பிரதர்ஸ் கூட்டணியில் விஜய்யும் இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. அடுத்த மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் தந்தை மகன் இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாகவும், இதில் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தந்தை விஜய்க்கு ஜோடியாக முதலில் ஜோதிகா நடிப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு பல்வேறு காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதால், அந்த கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த படத்தில் விஜயின் தோற்றத்தை வித்தியாசப்படுத்துவதற்காக, படக்குழுவினர் கலிபோர்னியாவிற்கு சென்றுள்ளனர். அங்கு 3டி வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பத்தில் விஜய்யின் தோற்றத்தை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெங்கட் பிரபு, விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலிபோர்னியாவில் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் கலிபோர்னியாவில் உள்ள திரையரங்கில் The Equalizer 3 படத்தை பார்த்திருக்கிறார். அப்போது நடிகர் டென்ஸல் வாஷிங்டன் வரும் ஒரு காட்சிக்கு, நடிகர் விஜய் உற்சாகத்தில் எழுந்து நின்று கையை வைத்து கொண்டாடும் புகைப்படத்தை வெங்கட் பிரபு இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் ஃபேன் பாயாக மாறிய இந்த நிகழ்வை அவர் ட்விட்டரில் பதிவிட, விஜய் ரசிகர்கள் அதை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.





