- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விழாவின் போது 3 பேரும் 3 நாட்களும் பட்டினி கிடந்தோம் - நவராத்திரி விழாவில்...

அந்த விழாவின் போது 3 பேரும் 3 நாட்களும் பட்டினி கிடந்தோம் – நவராத்திரி விழாவில் பழைய அனுபவத்தை அசைபோட்ட இசைஞானி இளையராஜா!

- Advertisement -

இசைஞானி இளையராஜா வீட்டில் நவராத்திரி விழா நடந்து வரும் நிலையில் அவர் கூறியதாவது, 1968ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நவராத்திரி விழா காலகட்டத்தில் தான் நான் சென்னைக்கு வந்தேன். அந்த நேரத்தில் நானும் அண்ணன் பாஸ்கர் பாரதிராஜா மூணு பேரும் சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லாமல் 3 நாட்கள் பட்டினி கிடந்தோம். அப்போது வடபழனி கோயில் எதிரில் இருக்கக்கூடிய வீதியில் நிறைய கடைகள் இருக்கும் நவராத்திரிக்காக மாலையில் பொரிகடலை சுண்டல் கொடுப்பாங்க. எல்லோரும் வரிசையில் நின்னு வாங்கிட்டு போவாங்க நானும் பாரதிராஜா பாஸ்கர் மூணு பேரும் எந்தெந்த கடைகள் கொடுக்கிறார்களோ அதுல போய் வரிசையில் நின்று வாங்கி அதை ரூமில் கொண்டு போய் பேப்பரை வைத்து அதில் பொரிகடலை சுண்டல் என்னென்ன இருக்கோ அதெல்லாம் போட்டு சாப்பிட்டு படுப்பது வழக்கம். அப்படி கழிந்தது அந்த நவராத்திரி என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்