- Advertisement -
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி ரிலீசான படம் டோரதி. ரிஷிகாந்த் கீர்த்தி சுரேஷ் சனந்த் முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 1990களில் மதுரை பின்னணியில் வளரும் இரண்டு நெருங்கிய நண்பர்களின் கதை தான் இந்த படம். இந்த நிலையில் டோரதி படம் வருகிற 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. தியேட்டர்களில் போதிய வரவேற்பை பெறாத இந்த படம் ஓடிடியில் எந்தளவுக்கு வரவேற்பை பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





