- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் பெயர் டைட்டில் கார்டில் திரையில் தோன்றும் போது ஒலிக்கும் சூப்பர் ஸ்டார் பிஜிஎம் இசைக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பும் ஆரவாரமும் உள்ளது. தேவா முதன் முறையாக ரஜினி படத்துக்கு இசையமைத்தஅண்ணாமலை படத்திலிருந்து ஜெயிலர் 2 வரை அது தொடர்கிறது. ஜெயிலர் 2 படத்தில் அனிருத் இசையமைத்திருந்தாலும் பல ஆண்டுகளாக தேவா இசையமைத்த அந்த பிஜிஎம் மியூசிக் தான் இன்னமும் ரஜினியின் படங்களில் முதலில் டைட்டில் கார்டில் அவரது பெயர் வருவது தேவாவுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. ரஜினி படங்களுக்கு எத்தனை இசையமைப்பாளர்கள் மாறினாலும் ரசிகர்கள் மனதில் பதிந்த தேவாவின் இசைக்கு என்றும் தனி இடம் உண்டு.





