- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன், தனுஷ் படங்களுக்கு ஆப்பு வைத்த விஜய் பட தயாரிப்பாளர் - அவரை சந்தோஷப்படுத்த இப்படி...

சிவகார்த்திகேயன், தனுஷ் படங்களுக்கு ஆப்பு வைத்த விஜய் பட தயாரிப்பாளர் – அவரை சந்தோஷப்படுத்த இப்படி ஒரு ஏற்பாடா?

- Advertisement -

பொங்கல் ரிலீஸ் படங்களாக சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படங்கள் கடந்த 12ம் தேதி ரிலீஸ் ஆகின. இத்துடன் மிஷன் சாப்டர் 1 என்ற அருண்விஜய் படமும், மெரி கிறிஸ்துமஸ் என்ற விஜய் சேதுபதி படங்களும் ரிலீஸ் ஆனது.

இதில் மெரி கிறிஸ்துமஸ் படம், ஏற்கனவே பிளாப் ஆன கதை என்பதால் விஜய் சேதுபதி, கத்ரினா கைப் நடிப்பிலும் அது சோபிக்கவில்லை. ரசிகர்களால் ஒருமுறை ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு கதை, மீண்டும் எத்தனை முறை எடுத்தாலும் அது தோல்விதான் அடையும் என்பதற்கு இது உதாரணமாகி விட்டது.

- Advertisement -

இயக்குநர் விஜய் இயக்கிய மிஷன் சாப்டர் 1 படம், முதலில் 80 தியேட்டர்களில்தான் ரிலீஸ் செய்யப்பட்டது. ஏனெனில் அயலான், கேப்டன் மில்லர் படங்களே பெருவாரியான தியேட்டர்களை பங்கிட்டு கொண்டதால் அருண் விஜய் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரிலீஸ்க்கு பிறகு ரசிகர்கள் அந்த படத்துக்கு தந்த வரவேற்பால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அயலான், கேப்டன் மில்லர் படங்களை தெலுங்கு வெர்சனில் வெளியிட அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் ஆயத்தமாகின. ஆனால் தமிழ்நாட்டில் இந்த படங்கள் வெளியான பிறகு ஒருவாரம் கழித்துதான் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அந்த படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் அங்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களில் மிக முக்கியமான ஒருவர் டில் ராஜூ, இவர் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளின் உரிமையாளராகவும் உள்ள அவர், பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து தெலுங்கில் அயலான், கேப்டன் மில்லர் படங்களை வெளியிடுமாறு அந்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார். அவரது பேச்சை மீற முடியாமல், அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

இப்படி அவர் கூறக் காரணம், மகேஷ்பாபு நடித்த குண்டூர்காரம் படம் அப்போது வெளியாகி உள்ளது. அந்த படத்தின் வசூலை அயலான், கேப்டன் மில்லர் படங்கள் பாதிக்க கூடாது என்பதற்காக, இந்த விஷயத்தை அவர் செய்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், மகேஷ்பாபுவிடம் தனது தயாரிப்பில் அவர் நடிக்க டில்ராஜூ கால்ஷீட் கேட்டுள்ளார். அதனால் அவரை குளிர்விக்கவும், அவரை சந்தோஷப்படுத்தவும் இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளார். அவரால்தான் அயலான், கேப்டன் மில்லர் படங்களின் ரிலீசை தெலுங்கில் ஒருவாரம் வரை தள்ளிப்போயிருக்கிறது. தனது சுயநலத்துக்காக சத்தமின்றி சிவகார்த்திகேயன், தனுஷ் படங்களுக்கு ஆப்பு வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் டில்ராஜூ.

- Advertisement -

சற்று முன்