- Advertisement -
Homeபொழுதுபோக்குமனித உணர்வுகளின் அத்தனை பரிமாணங்களையும் தன் இசையால் உயிர்ப்பித்தவர் - தேவா மறைவுக்கு இயக்குனர் பா...

மனித உணர்வுகளின் அத்தனை பரிமாணங்களையும் தன் இசையால் உயிர்ப்பித்தவர் – தேவா மறைவுக்கு இயக்குனர் பா ரஞ்சித் இரங்கல்!

- Advertisement -

திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தேனிசை தென்றல் தேவா மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பையும் தாங்கிக் கொள்ள முடியாத துயரத்தையும் தருகிறது. தமிழ் திரையிசையில் தனக்கென ஒரு தனித்துவமான இசைகளை உருவாக்கி கானா பாடல்களுக்கு வெகுஜன அங்கீகாரத்தை பெற்று தந்ததில் அவரது பங்களிப்பு அளப்பரியது. மனித உணர்வுகளின் அத்தனை பரிமாணங்களையும் தனது இசையால் உயிர்ப்பித்தவர். அவரது மறைவை இழப்பை ஏற்றுக் கொள்ளும் மனவலிமை இல்லை. அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் இசையுலகத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் பா ரஞ்சித் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்