- Advertisement -
நடிகர் சசிக்குமார் ஆரம்பத்தில் இருந்தே போலீஸ் கேரக்டரில் நடிப்பதை தவிர்த்து வந்தார். போலீஸ் கதை என்றாலே கேட்காமல் மறுத்து விடுவார். அதற்கு காரணம் அவர் தாடி வைத்திருக்கிறார். தாடி இல்லாமல் நடிக்க அவருக்கு விருப்பமில்லை. தாடிதான் அவரது முக அடையாளமாக உள்ளது. போலீஸ் அதிகாரி என்றால் தாடி இருக்க கூடாது. ஆனால் வதந்தி வெப் சீரிஸில் தாடி வைத்த போலீஸாக அவர் நடித்து ஜெயித்த நிலையில் இப்போது 3 படங்களில் அவர் போலீஸ் கேரக்டரில் நடிக்க கமிட் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது.





