- Advertisement -
Homeபொழுதுபோக்குலொள்ளு சபா சந்தானம், காமெடி நடிகர் சந்தானம், ஹீரோ சந்தானம்… அடுத்து அவர் எடுக்கப் போகும்...

லொள்ளு சபா சந்தானம், காமெடி நடிகர் சந்தானம், ஹீரோ சந்தானம்… அடுத்து அவர் எடுக்கப் போகும் அவதாரம் – போட்றா வெடிய! அவருக்கும் இவருக்கும்தான் இனி போட்டியா?

- Advertisement -

விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில், சினிமா படங்களை காமெடியாக கலாய்த்து நடித்து மக்களின் வரவேற்பை பெற்றவர் சந்தானம். அதன்பிறகு நடிகர் சிம்புவுக்கும், சந்தானத்துக்கும் ஏற்பட்ட நட்பு காரணமாக தனது படங்களில் சந்தானத்தை, சிம்பு நடிக்க வைத்து வாய்ப்பளித்தார். அதனால் மன்மதன், வல்லவன், ஒஸ்தி படங்களில் சந்தானம் நல்ல வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து உதயநிதியுடன் சந்தானம் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா போன்ற படங்கள் அவருக்கு நல்ல முன்னேற்றத்தை தந்தது. தொடர்ந்து சகுனி, அலெக்ஸ் பாண்டியன், வேதாளம், தெய்வத் திருமகன், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, வீரம், சிங்கம்புலி, லிங்கா போன்ற படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார்.

- Advertisement -

அதன்பிறகு சந்தானம் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். அவர் நாயகனாக நடித்த சபாபதி, தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஏ 1, கண்ணா லட்டு தின்ன ஆசையா, டிக்கிலோனா, குலுகுலு, வடக்குப்பட்டி ராமசாமி, இனிமே இப்படித்தான் போன்ற பல படங்களில் அவரது காமெடி கலந்த ஹீரோ நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் முழுநேர ஹீரோ நடிகராக சந்தானம் மாறிவிட்டார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சந்தானம் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை, வெற்றியை பெறவில்லை. இரண்டு புதிய படங்களில் கமிட் ஆகி அவர் இப்போது நடித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் காமெடி நடிகர், ஹீரோ ஆகிய நிலைகளை கடந்து அவர் அடுத்த நிலைக்கு இப்போது முன்னேறி இருக்கிறார்.

- Advertisement -

அதாவது நடிகர் சந்தானம், அடுத்து இயக்குனராக ஒரு படத்தை அவரே இயக்கி நடிக்க தயாராகி வருகிறார். அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் இப்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விஜய் டிவியில் காமெடியாக நடித்து, சினிமாவில் காமெடி ரோலில் நடித்து பிறகு கதாநாயகனாக மாறிய சந்தானம், இப்போது இயக்குனர் என்ற புதிய அவதாரத்துக்கு தயாராகி விட்டார்.

நடிகர் ஆர்ஜே பாலாஜி துவக்கத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்து பிறகு காமெடி நடிகராக மாறி, பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்து இப்போது அவரும் இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். சூர்யா நடிப்பில் அவரது 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அதனால் இனி சந்தானமும் இயக்குனராக களத்தில் குதிப்பதால் ஆர்ஜே பாலாஜிக்கும், சந்தானத்துக்கும் கடும் போட்டி இருக்குமா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்