- Advertisement -
நடிகர் மணிகண்டன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல் குருட்டுத் தைரியத்துடன் வந்து இறங்கி விட்டேன். அந்த அறியாமையால் கடந்த 20 ஆண்டுகளாக ஏராளமான அடிகளை வாங்கி உள்ளேன். முறையான சினிமா படிப்புடன் வந்திருந்தால் இன்னும் எளிதாக ஜெயித்திருக்கலாம். குட்நைட் படம் ரிலீஸான அன்று முதல் ஷோ ஓடும்போது தியேட்டரில் ஆட்கள் வருவார்களா? இல்லையா? என்ற பயத்தில் என் கைகள் நடுங்கியது. ஆனால் மக்கள் கொடுத்த வரவேற்பு தான் என்னை இன்று இந்த இடத்தில் அமர வைத்துள்ளது என்று நடிகர் மணிகண்டன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





