- Advertisement -
சமீபத்தில் நடிகர் வையாபுரி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, நான் பிறந்த உடனே என்னோட பாட்டி ஓடிப்போய் காலண்டர் பார்த்து இருக்காங்க. பார்த்தா அதுல அஸ்த நட்சத்திரம் கன்னி ராசி அப்படின்னு போட்டு இருக்கு. நான் ஐந்தாவது பையன். அங்க இருந்து ஓடி வந்து அவனை கொன்னுடுங்கன்னு சொல்லி இருக்காங்க. ஏன்னா அஸ்த நட்சத்திரம் பிறந்த பையன் அப்பாவோட இடுப்பு அளவுக்கு வளரும் போது அப்பா இறந்திடுவாங்களாம். அதனால் ஜாதகம் பிறந்த தேதி ஏதும் குறித்து வைக்கலே. என்னோட பாட்டி எப்போ பார்த்தாலும் இவனை கொன்னுடுங்கன்னு சொல்லிட்டே இருப்பாங்களாம். பாட்டி சொன்ன மாதிரியே நான் அஞ்சாவது படிக்கும்போதே எங்க அப்பா இறந்துட்டார். அந்த நாளில் பிறந்தது என்னோட தப்பா? என்று நடிகர் வையாபுரி கண் கலங்கியபடி அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





