- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 5ம் தேதி அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பது உங்களுக்கு தெரியும், உறுதியாக பேசிய நடிகர்...

வரும் 5ம் தேதி அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பது உங்களுக்கு தெரியும், உறுதியாக பேசிய நடிகர் அல்லு அர்ஜூன் – யாரைப் பற்றி சொல்கிறார் தெரியுமா?

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் ரிலீஸாகிறது. 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதனால் அதன் 2ம் பாகம் குறித்து ரசிகர்கள் வெகு ஆவலாக காத்திருக்கின்றனர். படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஆண்ட்ரியா பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. இதில் சமந்தா, அல்லு அர்ஜூனுடன் இணைந்து செம கிளாமரில் குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதே போல் இந்த படத்தில் வரும் ஐட்டம் பாட்டுக்கு ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

- Advertisement -

தெலுங்கு படமான புஷ்பா 2 தமிழ், மலையாளம், இந்தி, பெங்கால், கன்னட மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 800 திரைகளில் புஷ்பா வெளியாகிறது. ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் அதிக எண்ணிக்கையில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படமும் இதுதான்.

கடந்த சில வாரங்களாக புஷ்பா 2 படக்குழு பிரமோசன் பணிகளில் தீவிரம் காட்டி பங்கேற்று வருகிறது. சென்னை, ஐதராபாத், மும்பை, கேரளம் என முக்கிய நகரங்களுக்கு செல்லும் படக்குழுவினர் அங்கு ரசிகர்களை சந்தித்து புஷ்பா 2 படம் குறித்து பேசி வருகின்றனர். அதுவும் ரசிகர்கள் மத்தியில் அல்லு அர்ஜூன் பெரிய அளவில் வரவேற்பை பெறுகிறார்.

- Advertisement -

சமீபத்தில் சென்னையில் நடந்த புஷ்பா 2 பிரமோசன் பங்கேற்ற அல்லு அர்ஜூன், அவர் சென்னை தி நகரில் 20 ஆண்டுகள் இருந்ததாகவும், ரஜினிகாந்த் ரசிகன் எனவும் குறிப்பிட்டு பேசினார். மேலும், விழாவில் அவர் தமிழில் பேசி ரசிகர்களை வெகுவாக அசத்தினார். எந்த மண்ணில் நிற்கிறோமா அந்த மொழியில் பேசுவதுதான் மரியாதை, அந்த மண்ணுக்கு பெருமை என்றும் கூறி கைதட்டல் பெற்றார்.

கேரளம் கொச்சியில் நடந்த பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜூன் பேசுகையில், புஷ்பா படம் மீது கொண்ட காதல், இயக்குனர் சுகுமாறன் மீது கொண்ட மரியாதை காரணமாக இந்த படத்தில் வில்லனாக நடிக்க பகத் பாசில் சம்மதித்தார். வரும் 5ம் தேதி படம் வெளியான பிறகு, பகத் பாசில் எப்படிப்பட்ட ஒரு அற்புதமான நடிகர் என்பதை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள் என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்