- Advertisement -
இயக்குனர் மாரி செல்வராஜ் இப்போது மஞ்சணத்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். கேரளாவில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கிராமத்து பெண் கேரக்டரில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இதுகுறித்து மாரி செல்வராஜ் கூறுகையில், கிராமத்து பெண் என்றாலே இந்த மாதிரி நிறத்துடன் இப்படி ஒரு தோற்றத்துடன் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு சமூக பார்வை உள்ளது. அதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே நல்ல நிறமும் உடல் செழிப்பும் உள்ள கயாடு லோஹரை இந்த படத்தில் கிராமத்து பெண் கேரக்டரில் கமிட் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.





