- Advertisement -
அக்கா என்ற வெப் தொடரில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, 1980களின் பின்னணியில் பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதை இது. தென்னிந்தியாவில் இருக்கும் பெர்னூர் என்ற கற்பனை நகரத்தை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பவானியாக நானும் ருத்ராவாக ராதிகா ஆப்தேவும் நடித்துள்ளோம். சாணிக்காயிதம் படத்தில் எனது ஆக்ஷன் கேரக்டரில் அதிக வன்முறை இருந்தது. அக்கா தொடரில் பவானி ஒரு அமைதியான மற்றும் நிதானமான கேங்ஸ்டராக வருகிறேன். இதுபோன்ற தனித்துவமான கதையில் நான் நடித்ததில்லை. இது ஒரு புது உலகம். இந்த தொடரில் நான் கேங்ஸ்டர் ஆக தோன்றினாலும் எனக்கென்று ஒரு பாரம்பரியமும் அதற்கேற்ற உடல் மொழியும் இருக்கும் என்று கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.





