- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து… அடுத்து 2 குடும்பங்களிலும் பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவு...

தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து… அடுத்து 2 குடும்பங்களிலும் பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவு – இதில் அந்த 2 பேர் குறித்து யாருமே யோசிக்கலையா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் காதல் திருமணம் செய்துக்கொள்ளும் நட்சத்திர தம்பதிகள், திடீரென பிரிவை அறிவிப்பதும் அடுத்து குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று நிரந்தரமாக பிரிவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் தான் பெரிய அளவில் வருத்தமும், அதிருப்தியும் அடைகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் இதுவரை வை ராஜா வை, 3 மற்றும் லால் சலாம் ஆகிய மூன்று படங்களை இயக்கி உள்ளார். ஆனால் இதில் எந்த படமுமே பெரிய வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே நடிகர் தனுஷை, தீவிரமாக காதலித்து 2004ம் ஆண்டில் திருமணமும் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கும் நேற்று சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நலநீதிமன்றத்தில் அவர்களது பரிபூரண விருப்பத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டு விட்டது. பொருளாதார ரீதியாக இந்த பிரிவு அவர்களுக்குள் எந்த பாதிப்பையும் சிறிதும் ஏற்படுத்தாது என்றாலும், வாழ்க்கையில் உறவு நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏனெனில் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். இனி அவர்கள் தந்தை பராமரிப்பில் இருப்பார்களா, தாய் பராமரிப்பில் இருப்பார்களா என்று தெரியவில்லை. அல்லது இருவரது பராமரிப்பிலும் மாறி மாறி இருக்கப் போகிறார்களா, அல்லது அப்பாவிடம் ஒருவர், அம்மாவிடம் ஒருவர் என இருக்க வாய்ப்புள்ளதா என்றும் உறுதியில்லை.

- Advertisement -

ஆனால் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா, ஏற்கனவே முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு 2வது திருமணம் செய்து கணவருடன் வாழ்ந்து வருகிறார். அதனால் ஐஸ்வர்யாவுக்கும் 2வது திருமணம் செய்து வைக்கவே அவரது பெற்றோர் ரஜினி, லதா விரும்புவர். அதனால் நிச்சயம் அவருக்கு 2வது திருமணம் நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷை பொருத்தவரை, ஏற்கனவே அவரது அண்ணன் செல்வராகவன், தனது முதல் மனைவி நடிகை சோனியா அகர்வாலை விவாகரத்து செய்துவிட்டு, கீதாஞ்சலி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். அதே போல் தனுஷூக்கு அவருக்கு பிடித்த பெண்ணையோ, அல்லது உறவுக்கார பெண்ணையோ திருமணம் செய்துவைக்க தனுஷின் பெற்றோர் தயாராக இருக்கின்றனர். இருவரது தரப்பில் இருந்தும் இதற்கான அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்