- Advertisement -
கன்னட மொழியில் வெளியான கேஜிஎஃப் படம் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. அதன் பிறகு தமிழில் விக்ரம் ஜோடியாக கோப்ரா என்ற படத்தில் நடித்தார். தெலுங்கில் ஹிட் 3 தெலுசு கதா ஆகிய படங்களில் நடித்தார். இப்போது ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த தெலுங்கு படம் ஆதர்ஷ குடும்பம் எகே 47 வருகிற 30ம் தேதி ரிலீசாக உள்ளது. இதுகுறித்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கூறுகையில், இந்த படத்தில் நான் காமெடி கேரக்டரில் நடித்துள்ளேன். இதுவரை இப்படி ஒரு கேரக்டரில் நான் நடித்ததில்லை. இதுதான் முதல் முறை. இந்த படத்தை பிளாஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். 2 படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்று ஸ்ரீநிதி ஷெட்டி உறுதியாக கூறியிருக்கிறார்.





