- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதன்முறையாக மலையாள படத்தில் நடிக்கும் பிரபல நடிகை - ஆனால் இதுவரை சொந்த மொழி படத்தில்...

முதன்முறையாக மலையாள படத்தில் நடிக்கும் பிரபல நடிகை – ஆனால் இதுவரை சொந்த மொழி படத்தில் நடிக்காத நடிகையும் இவர்தானாமே?

- Advertisement -

பொதுவாக, தாங்கள் வாழ்ந்த மாநிலம், அங்கு பேசப்படும் மொழி சார்ந்த படங்களில் நடிப்பதுதான் நடிகைகளுக்கு வழக்கமாக இருக்கிறது. தமிழில், தெலுங்கில், கன்னடத்தில், மலையாளத்தில் என அவரவர் சொந்த மொழியில் எடுக்கப்பட்ட படங்களில் அறிமுகமான பின்பு, அங்கு பிரபலமாகி மற்ற மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெறுவதுதான் வழக்கம்.

உதாரணமாக மலையாளத்தில் இருந்துதான் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் தமிழ் சினிமாவுக்குள் வந்தனர். ஆந்திராவை சேர்ந்த ரோஜா தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானார். மீனாவும் ஆந்திராவில் தெலுங்கு படங்களில் நடித்து தமிழுக்கு வந்தார். குஷ்பு, இந்தி படங்களில் நடித்து தமிழுக்கு வந்தார்.

- Advertisement -

ஆனால், தமிழ் ரசிகர்களால் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழில் சுந்தர் சி இயக்கிய ரெண்டு படத்தில், அறிமுகமானார். மாதவன் ஜோடியாக நடித்த அவரை, தமிழ் சினிமா ரசிகர்கள் முதல் படத்தில் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

மீண்டும் சில ஆண்டுகளுக்கு பிறகு, அருந்ததி படம் மூலம், தமிழில் அனுஷ்கா தோன்றினார். தமிழ் ரசிகர்கள் அவரது அசத்தலான அழகில் சொக்கிப் போயினர். தொடர்ந்து வேட்டைக்காரன், லிங்கா, சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன், என்னை அறிந்தால், இஞ்சி இடுப்பழகி, பாகுபலி, தோழா உள்ளிட்ட பல படங்களில் அனுஷ்கா நடித்தார்.

- Advertisement -

ரஜினி, விஜய், அஜீத், கார்த்தி, சூர்யா, சியான் விக்ரம், ஆர்யா என பிரபல முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா, ஒரு கட்டத்தில் திடீரென காணாமல் போனார். அதிக உடல்பருமன் காரணமாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும், பலகட்டங்களாக உடல் எடையை குறைக்க முயற்சித்தும் அது முடியவில்லை எனவும் தகவல் பரவியது.

இதற்கிடையே தற்போது, முதன்முறையாக மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார் அனுஷ்கா ஷெட்டி. ஹோம் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கும் படம் என்றும் கூறப்படுகிறது. இதில் மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், அனுஷ்கா ஷெட்டி, கர்நாடகா மாநிலம் பெங்களுருவைச் சேர்ந்தவர். தாய்மொழியாக துளு மொழி பேசும் கன்னடத்துக்காரரான அனுஷ்கா ஷெட்டி, இதுவரை தனது சொந்த மாநில மொழியான கன்னடத்தில் ஒரு படத்தில் கூட இதுவரை நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்