- Advertisement -
Homeபொழுதுபோக்குபொன்விழாவை 2025ம் ஆண்டில் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு தரப்போகும் டபுள் ட்ரீட்...

பொன்விழாவை 2025ம் ஆண்டில் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு தரப்போகும் டபுள் ட்ரீட் என்ன தெரியுமா? – ரஜினி 50ஐ கொண்டாடுங்கடே…!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மோதிர கையால் குட்டு வாங்கியது போல இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா நடித்திருந்தார்.

இதில் ரஜினி ஒரு வீட்டில் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வருவார். அப்போது பைரவி எங்கே என்றுதான் கேள்வி எழுப்புவார். பைரவி என்பது அவருக்கு ஒரு ராசியான பெயராக அமைந்துவிட்டது. அவர் நடித்த பைரவி படத்தில்தான் அவர் முதல் தடவையாக ஹீரோவாக நடித்தார். அந்த படத்தை கதை ஆசிரியர் கலைஞானம் டைரக்ட் செய்திருந்தார்.

- Advertisement -

துவக்கத்தில் ரஜினி கமல் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். ரஜினிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்த படம் 16 வயதினிலே. இந்த படத்தை இயக்கியது இயக்குனர் இமயம் பாரதிராஜா. இந்த படத்தில் சப்பாணியாக கமல், மயிலுவாக ஸ்ரீதேவி, பரட்டையனாக ரஜினிகாந்த் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரஜினி கமல் இருவருக்குமே தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து அவள் அப்படித்தான், ஆடுபுலி ஆட்டம், அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும் என பல படங்களில் ரஜினி கமல் இணைந்து நடித்த நிலையில், அவர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு தனி தனியாக நடித்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை அடைய முடியும். இப்படி இருவரும் ஒன்றாகவே சேர்ந்து நடித்தால் தயாரிப்பாளர்கள் தான் அதிக லாபம் அடைவார்களே தவிர, நாம் வளர்ச்சி அடைய முடியாது என்று பேசி முடிவெடுத்து கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் தனித்தனியாக நடித்து வருகின்றனர். அதே நேரத்தில் இருவரும் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு, சினிமா பயணத்தில் தனது 50வது ஆண்டில் பொன்விழா கொண்டாடுகிறார். ஆனால் இதுவரை தமிழ் சினிமாத்துறை சார்பில் அவருக்கு விழா நடத்தவோ, வேறு ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சிகள் செய்யவோ, ரஜினியை கௌரவிக்கவோ எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தனது ரசிகர்களை தனது பொன்விழா ஆண்டில் குஷிப்படுத்த நடிகர் ரஜினிகாந்த் தயாராகிவிட்டார்.

இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்து கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க உள்ளார். கூலி, ஜெயிலர் 2 ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து 2025ம் ஆண்டில் இரண்டு படங்களையும் அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளார். தனது சினிமா வாழ்க்கையில் பொன்விழா 2025ம் ஆண்டில் ரசிகர்களுக்கு 2 படங்களை தர தயாராகி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் ஒரே நேரத்தில் 2 படங்களின் படப்பிடிப்புகளிலும் அவர் கலந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்