- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. தமிழில் கபாலி ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது, வட இந்திய நடிகைகள் வெள்ளையாக இருப்பதால் தான் தென்னிந்திய படங்களில் அவர்களை நடிக்க வைக்கிறார்கள் என்கிற பார்வை இருக்கு. என்னை பொறுத்தவரை நான் ரொம்ப வெள்ளையாக இல்லை. ஆனால் திறமையான மற்றும் அழகான நடிகைகள் ஏராளமானோர் இருக்கும் போது வட இந்திய நடிகைகளை தேடிச் சென்று நடிக்க வைப்பது ஏன்? நடிகையின் திறமையை விட தோல் நிறத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா? என்று நடிகை ராதிகா ஆப்தே கோபமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.





