லியோ படத்தில் இருதயராஜ் டிசோசா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் மன்சூர் அலிகான். அவரது தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்பதால் இந்தப் படத்தில் மன்சூர் அலிகானுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். விஜய்யுடனே வரும் கதாபாத்திரமாக அது அமைந்தது. அவரது நடிப்பும் ஓரளவு நன்றாகவே பேசப்பட்டது. அநேகமாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் அந்த எண்ணத்துக்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசினார். சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “லியோ படத்தில் த்ரிஷாவுடன் பெட் ரூம் சீன் இருக்கும்னு நினைச்சேன். அவரை பாலியல் வன்கொடுமை செய்யும்படி காட்சி இருக்கும் என நினைத்தேன். குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டது போல் த்ரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை” என்று ஆபாசமாக பேசினார்.
இந்த பேச்சை பார்த்த த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து மன்சூர் அலிகானை லெஃப்ட் ரைட் வாங்கினார். மேலும் அவர் மனித குலத்துக்கே இழுக்கு என்றும் குறிப்பிட்டார். த்ரிஷா மட்டுமின்றி திரையுலகிலிருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். தேசிய மகளிர் ஆணையமும் மன்சூர் அலிகான் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இப்படி மன்சூருக்கு எதிராக பலரும் கொந்தளித்துக்கொண்டிருக்க லியோ படத்தின் ஹீரோவான விஜய்யோ இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்துவருகிறார். அதுவும் பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரத்தில் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று புரியவில்லை. அவர்தான் அடுத்த எம்ஜிஆர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டால் இப்படி அமைதியாக இருந்ததில்லை.
ஒருமுறை சேலத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ஒருவர் ஜெயலலிதாவை தவறான நோக்கத்தில் தொட்டுவிட்டார். அது ஜெயாவுக்கும் புரிந்துவிட்டது. நேராக சென்னை வந்த அவர் எம்ஜிஆரிடம் முறையிட்டார். பிறகு அந்த மாவட்ட செயலாளரை எம்ஜிஆர் தன்னுடைய தோட்டத்துக்கு வரவைத்து என்ன செய்தார் என்று அப்போதைய திரைத்துறையினருக்கு தெரியும்.
விஜய் அப்படியெல்லாம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கையையாவது வெளியிடலாம். அப்போதுதான் இதுபோன்று பேசினால் விஜய் குரல் கொடுப்பார் என்று பயம் மற்றவர்களுக்கு வரும். அதேபோல் அப்படி தவறாக பேசினால் விஜய் படத்தில் நடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் எழுந்து இதுபோன்று பேசலாம் என நினைப்பவர்கள் குறைவார்கள்” என்றார்.





