- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஷால் ஆம்பள தானே, பொதுச் செயலாளர்தானே? அவரால அதை செய்ய முடியுமா? பெரிய நடிகர்கள் முன்வந்தா...

விஷால் ஆம்பள தானே, பொதுச் செயலாளர்தானே? அவரால அதை செய்ய முடியுமா? பெரிய நடிகர்கள் முன்வந்தா இந்த பிரச்னை தீரும்- சீனியர் நடிகை ராதிகா சரத்குமார் ஆவேசம்

- Advertisement -

நடிகர் விஷால் சமீபத்தில் தனது பிறந்த நாளில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் ஆட்களை செருப்பால் அடிக்க வேண்டும். அந்த தைரியம் பெண்களுக்கு வர வேண்டும் என்று கோபமாக பேசியிருந்தார். இதுபற்றி சீனியர் நடிகை ராதிகா சரத்குமார் கோபமான தனது பதிலை பதிவு செய்திருக்கிறார்.

நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது, சின்மயி ஒரு குற்றத்தை சொன்ன போது அதை யாரும் நம்பவில்லை. இதை ஏன் இத்தனை நாட்களாக சொல்லவில்லை. இதற்கு என்ன ஆதாரம் என்றுதான் கேள்விகள் வந்தது. அவருக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. பெண்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் குறித்து ஆண்களால் புரிந்துக்கொள்ள முடியாது.

- Advertisement -

பத்திரிகை சாராத ஒரு நபர், ஒரு யூடியூபர் ஒரு பேட்டியில் நடிகைகளை பற்றி தரக்குறைவாக பேசுகிறார். விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த நபரை செருப்பால் அடிக்கட்டும். அவர் நடிகர் சங்க பொதுச்செயலாளர்தானே, தைரியம் இருந்தா போ. நீ ஒரு ஆம்பளை என்றால் போய் அடி. துடைப்பத்தை எடுத்துக்கொண்டு நானும் உடன் வருகிறேன். என்னை கூப்பிடு வர்றேன்.

யார் யாரை வேண்டுமானாலும் பேசலாம். அப்படி பேசினால் செருப்பால் அடி என்று பேசுவது ஒரு தலைவர் பேசற பேச்சு கிடையாது. நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம். நீங்க தான் இந்த பிரச்னைகளை எல்லாம் கவனிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெரிய நடிகர்கள் எல்லாம் முன்வர வேண்டும். அப்போதுதான் இந்த பெண்களுக்கு தைரியம் வரும்.

- Advertisement -

இப்படி பெரிய நடிகர்கள் இதில் ஆதரவும், அரவணைப்பும் காட்டும் போது சினிமாத்துறையில் உள்ள பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இதில் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும். அவர்களுக்கும் இதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் தேவையான வசதிகளை செய்து தருவதும், பாதுகாப்பு தருவதும் தயாரிப்பாளர்களின் பொறுப்பு.

மறுபடியும் இந்த பிரச்னைகள் வந்துக்கொண்டே தான் இருக்கும். என்னை போன்ற சில நடிகைகள் தைரியமாக அடிப்பார்கள், திட்டுவார்கள். ஆனால் சில பெண்கள் மிகவும் பயப்படுவார்கள். இதற்காக லாயர், பெண் போலீஸ், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என ஒரு குழுவை உடனே அமைக்க வேண்டும். இதை தாமதிக்க கூடாது, என்று ராதிகா சரத்குமார் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்