- Advertisement -
ஒருமுறை கவிஞர் வாலியிடம் புதுக்கவிஞர்கள் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு வாலி கூறியதாவது, சினிமாத்துறையில் பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொன்னால் கண்ணதாசன் முதல் காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே கிடையாது. இன்னொரு கவிஞன் வந்து என் இடத்தைப் பிடித்துக்கொண்டு விடுவான் என்கின்ற அற்ப சிந்தனையெல்லாம் என் மனதில் அரும்பியதில்லை. எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாதென்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி நான் அல்ல என்று கவிஞர் வாலி கூறியிருக்கிறார்.





