- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்கள் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு நடிகர் விஷால் சொன்ன பதில்; அப்படியே தலை சுத்திப்...

உங்கள் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு நடிகர் விஷால் சொன்ன பதில்; அப்படியே தலை சுத்திப் போச்சு – நீங்க எல்லாம் வேற லெவல் ப்ரோ…

- Advertisement -

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். சண்டக்கோழி, செல்லமே, தாமிரபரணி, பூஜை, அவன் இவன், துப்பறிவாளன், திமிரு, நான் சிவப்பு மனிதன், மார்க் ஆண்டனி போன்ற பல படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்.

இப்போது டைரக்டர் ஹரி இயக்கத்தில், ரத்னம் என்ற படத்தில் விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். தாமிரபரணி, பூஜை என 2 படங்களில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள நிலையில், இது இருவரும் இணைந்த 3வது படமாகும். இந்த அதிரடி ஆக்சன் படம் வருகிற 26 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது/ இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

நடிகர் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. வயது 40 க்கு மேல் ஆன நிலையில், அவர் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது பலவித விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே அவர் சரத்குமார் மகள் வரலட்சுமியை காதலிக்கிறார், அவரை தான் திருமணம் செய்து கொள்வார் என்ற ஒரு தகவல் அடிபட்டது.

அதற்கு முன்னதாக ஒரு தொழிலதிபர் மகளுடன், அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. சில புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் எதுவுமே இதில் நடக்கவில்லை. இன்னும் முரட்டு சிங்கிளாகத்தான் விஷால் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே சைக்கிளில் வந்து ஓட்டுப் போடுவது, 2026 தேர்தலில் வேட்பாளர் என்றும் அலப்பரை செய்து வருகிறார் விஷால்.

- Advertisement -

இந்நிலையில், உங்கள் திருமணம் எப்போது என்று ஒரு நேர்காணலில் கேட்ட போது அதற்கு விஷால் கூறியதாவது, ஆர்யாவுக்கு திருமணம் முடிந்த பின் எனது திருமணம் என்று கூறியிருந்தேன். ஆனால் ஆர்யாவுக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்து விட்டது. அதன்பிறகு, நடிகர் சங்கர் கட்டிடம் கட்டி முடித்ததும் அந்த கட்டிடத்தில்தான் எனது திருமணம் என்றேன். இன்னும் கட்டிடப் பணி முடியவில்லை.

என் அம்மா என்னிடம் திருமணம் குறித்து கேட்டபோது, இன்னும் சல்மான் கான், பிரபாஸ் போன்றவர்களே திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்களுக்கு திருமணம் முடிந்த பின்புதான் என் திருமணம் என்று சொல்லி சமாளித்தேன். கார்த்தியின் தீவிர முயற்சியால் இந்த ஆண்டிற்குள் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் நிச்சயம் 2024 இறுதிக்குள் என்னுடைய திருமணம் நடக்கும். ஆனால் பெண் யார் என்று எனக்கே தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்