- Advertisement -
ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியதாவது, செல்வராகவன் அப்படிங்கற கேரக்டர் எங்க வீட்டுல பொறக்கலைன்னா என்னோட குடும்பமே இல்லை. துள்ளுவதோ இளமை படம் நான்தான் பண்ணினேன். பாதி படம் பண்ணிட்டு இருக்கும்போது இன்னொரு படம் வந்தது. அதை பண்ண வேண்டிய கட்டாயம். அவர் சினிமா சினிமான்னு அலைஞ்சிட்டு இருக்கும்போது நீ இந்த படத்தை பண்ணு என்று சொல்லி நான் அந்த படத்தை பண்ண போயிட்டேன். ஆனா அவர் உள்ளே நுழைந்ததற்கு அப்புறம் தான் அது ஒரு மாதிரி படமா மாறிடுச்சு. காதல் கொண்டேன் படத்துல தனுஷை செதுக்கி எடுத்து தந்தான். புதுப்பேட்டை படமும் செல்வராகவனின் மேஜிக் தான் என்று இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியிருக்கிறார்





