- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாடா… இதை சொல்றதுக்கு இப்படியா மாசக்கணக்குல இழு இழுன்னு இழுப்பீங்க - நொந்து போன ரசிகர்களுக்கு...

அப்பாடா… இதை சொல்றதுக்கு இப்படியா மாசக்கணக்குல இழு இழுன்னு இழுப்பீங்க – நொந்து போன ரசிகர்களுக்கு தளபதி சொன்ன ஓகே – போடு வெடிய, அலப்பரை கௌப்புங்க!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது, திருவனந்தபுரத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பொருத்த வரை விஜய்க்கு இது கடைசி படத்துக்கு முந்தைய படமாக இருக்கிறது. இன்னும் ஒரு படத்தில், அதாவது தனது 69வது படத்தில் நடித்துவிட்டு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சிப் பணிகளில் முழு ஈடுபாடுடன் செயல்பட இருக்கிறார்.

நடிகர் விஜய், ஏப்ரல் மாதத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டு இருந்தார். இந்த மாநாட்டில்தான் கட்சியின் முக்கிய கொள்கைள், கட்சிக் கொடி, அரசியலுக்கு வந்தால் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருந்தார். ஆனால் பார்லிமென்ட் தேர்தல் குறுக்கிட்டதால் அந்த மாநாட்டை ஏப்ரலில் நடத்த முடியாமல் போய்விட்டது.

- Advertisement -

இதையடுத்து மே மாதத்தில் அல்லது ஜூன் மாதத்தில் இந்த மாநாட்டை விஜய் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விஜயை பொருத்தவரை, 2016ம் ஆண்டில் வரப்போகிற சட்டசபை தேர்தலில் ஜெயித்து ஆட்சியை பிடிக்க வேண்டும். அதுவும் சாதாரண வெற்றியாக இல்லாமல் சரித்திர வெற்றியாக மிக அதிகமான தொகுதிகளில் பெருவாரியான ஓட்டுகள் வித்யாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

நடிகர் விஜயை பொருத்த வரை, ஆட்சிக்கு வந்துவிட்டால் அடுத்தடுத்த தேர்தலின் போது மக்களிடம் சென்று ஓட்டு கேட்டு நிற்கக் கூடாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு ஜெயித்தது போல, மக்களாகவே முன்வந்து தன் ஆட்சியை தொடர வைக்க வேண்டும். அப்படி மக்கள் விரும்பி ஏற்கிற வகையில், தனது ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் விஜயின் பேராசையாக இருக்கிறது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தின் டைரக்டர் யார், என்ன கதை, எப்போது அந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்பதில் இழுபறி நிலையே நீடித்து வந்தது. வெற்றிமாறன், ஷங்கர், அட்லி, எச் வினோத், தெலுங்கு பட டைரக்டர் திரிவிக்ரம், கார்த்திக் சுப்பராஜ், ஆர்ஜே பாலாஜி உட்பட பலரது பெயர்களும் இதில் அடிபட்டடன. கடைசியாக யாரிடம் கதை கேட்டாலும், நடுவுல நீங்க ஒரு படம் பண்ணீட்டு வந்துடுங்க என்று கூறுவதை விஜய் வழக்கமாக்கி கொண்டார்.

இந்நிலையில் தற்போது விஜயின் 69வது படத்தை இயக்கப் போவது இயக்குனர் எச் வினோத் தான் என்பது உறுதியாகி உள்ளது. அவர்தான் விஜய் படத்தை இயக்குகிறார். ஆனால் இந்த தகவலை இப்போது யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்று விஜய் தரப்பினர் கூறியதாகவும் தெரிய வந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே கமல் படத்தை எச் வினோத் இயக்குவதாக இருந்து அது மிஸ் ஆனதால், அதுபோல் எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக இப்படி சொல்லப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்