- Advertisement -
ஒருமுறை நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரகுவரன் கூறியதாவது, வாழ்க்கையில் நான் பண்ணின பெரிய தப்பு நடிகன் ஆனதுதான். நடிக்க வராமல் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பேன். சின்ன நிலத்துல பயிரிட்டு அந்த பயிரை அறுவடை பண்ணி மூட்டைய முதுகுல சுமந்துட்டு கொண்டு போய் மார்க்கெட்டுல போட்டு அதுல வர்ற பணத்துல கஞ்சி கூழ் குடிச்சிட்டு நிம்மதியா வாழ்ந்திருப்பேன். ஆண்டவனே மழை வரனும்ன்னு வேண்டிக்கிட்டு பயிரை பார்த்துவிட்டு கோழி ஆடு மாடு நாய் எல்லாம் வச்சுக்கிட்டு அவங்களுக்கு சாப்பாடு போட்டு நிம்மதியா வாழ்ந்திருப்பேன் அதுதான் வாழ்க்கை என்று நடிகர் ரகுவரன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





