- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனிமே நாம 2 பேரும் படத்துல நடிக்க முடியாதுப்பா, வா வீட்டுக்கு போயிடலாம் - பொள்ளாச்சியில்...

இனிமே நாம 2 பேரும் படத்துல நடிக்க முடியாதுப்பா, வா வீட்டுக்கு போயிடலாம் – பொள்ளாச்சியில் சத்யராஜை அழைத்த நடிகர் கவுண்டமணி!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, கவுண்டமணி அண்ணன் பேசினாலே பயங்கரமா நக்கல் செய்வார். ஒருமுறை பொள்ளாச்சி ஷூட்டிங்குக்கு நானும் கவுண்டமணி அண்ணனும் காரில் போய்க்கிட்டு இருந்தோம். அப்போ கார் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துட்டு வந்த கவுண்டமணி, இனிமே நாம 2 பேரும் படத்துல நடிக்க முடியாதுப்பா, ஷூட்டிங் போக வேண்டாம், வா வீட்டுக்கு திரும்பி போயிடலாம், என்றார். எனக்கு எதுவும் புரியலே. ஏன் இப்படி சொல்றீங்க?ன்னு கேட்டேன். அங்க பாருன்னு ரோட்டுல ஒட்டியிருந்த சிம்மராசி போஸ்டரை காட்டினார். சரத்குமார் ஆனந்தராஜ் இவங்க 2 பேருமே இருக்கிற விக்கை எல்லாம் வாங்கி தலையில் போட்டுட்டாங்க. இனிமே நமக்கு போடறதுக்கு விக்கு கிடைக்காது, அப்புறம் எப்படி நாம படத்துல நடிக்கிறது? என்று சீரியஸாக சொல்ல நான் விழுந்து விழுந்து சிரிச்சேன் என்று சத்யராஜ் கூறியிருக்கிறார்.

சற்று முன்