- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்கவில்லை.. இமானை யாரோ தூண்டிவிட்டிருக்கிறார்கள்.. எஸ்கேவுக்கு சப்போர்ட் செய்யும் எழுத்தாளர்

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்கவில்லை.. இமானை யாரோ தூண்டிவிட்டிருக்கிறார்கள்.. எஸ்கேவுக்கு சப்போர்ட் செய்யும் எழுத்தாளர்

- Advertisement -

தமிழின் முன்னணி இசையமைப்பாளரான இமான் சிவகார்த்திகேயனுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இருவரும் இணைந்தாலே அந்தப் படத்தின் பாடல்கள் மெகா ஹிட்தான் என்ற நிலை இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. அதற்கு காரணம் என்னவென்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.

சூழல் இப்படி இருக்க இமான் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அவர் செய்த துரோகத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இந்த ஜென்மத்தில் கண்டிப்பாக அவருடன் சேரமாட்டேன். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அது என்னவென்று வெளியே சொல்லாமல் இருக்கிறேன்” என்றார்.

- Advertisement -

அதனையடுத்து இமானும் அவரது முதல் மனைவி மோனிகாவும் பிரிந்ததற்கு காரணமே சிவகார்த்திகேயன் மட்டும்தான் என்று பலர் கூற ஆரம்பித்தனர். ஆனால் அதனை மோனிகா திட்டவட்டமாக மறுத்து; இமான் எடுத்த விவாகரத்து முடிவுக்கு சிவா சப்போர்ட் செய்யவில்லை. அதைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார். ஆனால் இதை வெளியில் தவறாக புரிந்துகொள்கிறார்கள் என்றார்.

இந்நிலையில் எழுத்தாளர் அனுபரமி தனியார் யூட்யூப் சேனலுக்கு இவ்விவகாரம் தொடர்பாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை வெளியில் சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும் என்று இமான் நினைக்கிறார். ஆனால் ஒருவரை விவாகரத்து செய்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பின் இப்போது ஏன் இதுபற்றி பேச வேண்டும்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் மீது தவறு இருக்கா இல்லையா என்று எதுவுமே தெரியாமல் ஒருதரப்பினர் அவர் மீது தொடர்ந்து வன்மத்தை கொட்டுகிறார்கள். தொகுப்பாளராக இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு சிவா வந்திருக்கிறார். வளர்ந்து வரும் நடிகர் மீது இப்படி ஒரு அசிங்கத்தை சுமத்த என்ன காரணமாக இருக்கும் என்று யாருமே யோசிப்பதில்லை.

அவரது வளர்ச்சி பிடிக்காத சிலர் இமானை தூண்டிவிட்டு செய்ய வைத்திருக்கிறார்கள். இமானுக்கு தனது குழந்தைகள் மீது இருக்கும் பாசத்தால் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை வெளியில் சொல்லவில்லை என சொன்னார். ஏன் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்களுடைய எதிர்காலம் என்னவாகும். யாராக இருந்தாலும் தயவு செய்து அந்தரங்க விஷயத்தை வெளியில் சொல்லாதீர்கள்” என்றார்.

- Advertisement -

சற்று முன்