- Advertisement -
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கதையின் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்கவில்லை. தர்மன் படம் ஷூட்டிங்கில் நயன்தாரா பிஸியாக இருந்ததால் வரவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அப்போது ஏற்கனவே கமிட் ஆன ஒரு விளம்பர படம் ஷூட்டிங்கில் நடிகை நயன்தாரா இருந்ததாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. 2 மணி நேரம் பிரேக் டைமில் கூட இந்த விழாவில் அவர் வந்து கலந்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





