- Advertisement -
Homeபொழுதுபோக்குஏம்பா… உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? - நடிகர் தனுஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஏம்பா… உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? – நடிகர் தனுஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் இயக்குனர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டு ஒரு நட்சத்திர கலைஞராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தனுஷ், இட்லி கடை என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதியே இட்லி கடை படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாளில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியானதால் தனுஷ் படத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். பாடல் காட்சி ஒன்று மீதம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது வருகிற அக்டோபர் 1ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

ஆனால் இப்போதும் ஒரு சிக்கல் இந்த படத்துக்கு இருக்கிறது. ஏனெனில் அக்டோபர் 2ம் தேதி நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா படத்தின் 2ம் பாகம், காந்தாரா சேப்டர் 1 என்ற டைட்டிலில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதால் ஒரு நாள் முன்பாக வெளியாகும் இட்லி கடை படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

ஒருவேளை இட்லி கடை ஆறிப் போய்விட்டால், காந்தாரா படம் இன்னும் அதிக தியேட்டர்களை அபகரித்து கொள்ளும் ஒரு சிக்கலான சூழலும் இருக்கிறது. ஏற்கனவே ராயன் படம் போல நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. ஒருவேளை இட்லி கடையும் ஊத்திக்கொண்டால் டைரக்டர் சேரை மடக்கி வைக்க வேண்டிய நிலை தனுஷூக்கு ஏற்படும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சென்னையில் உள்ள ஈவிபிக்கு எதிரில் ஒரு பிரமாண்ட செட் அமைத்து தனுஷ் 54 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜீவி பிரகாஷ்குமாரும் சில தினங்களாக காணப்படுகிறார். அவரும் நடிகர் என்பதால், இந்த படத்தில் அவரும் தனுஷூடன் இணைந்து நடிக்கிறாரா என பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், உண்மையான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.

அதாவது இட்லி கடை படத்தின் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார்தான். அதனால் தனுஷ் நடித்து வரும் படப்பிடிப்பு தளத்துக்கே நேரில் வந்த இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரும், தனுஷூம் கேரவனில் அமர்ந்து இட்லி கடை படத்தின் பைனல் டச் ஒர்க் ரீ ரிகார்டிங் பணிகளை செய்து வருகிறார்கள். படப்பிடிப்பு இடையே கிடைக்கும் பிரேக் டைமில் கேரவனுக்கு வரும் தனுஷ், ஜீவி பிரகாஷ்குமாருடன் இணைந்து இந்த பணிளை கண்காணிக்கிறார். ஏம்பா, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்