- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை இனியா கூறியிருப்பதாவது, சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என்னுடைய உண்மையான பெயர் ஸ்ருதி. படத்திற்காகவே இனியா என்று பெயர் மாற்றிக் கொண்டேன். ஆரம்பத்தில் ஜோதிடம் நியூமராலஜி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத எனக்கு சினிமாவில் நடிக்க வந்த பிறகு அவற்றின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மனதுக்கு மகிழ்ச்சியும் அதிர்ஷ்டம் நம்முடன் இருப்பது போன்ற உணர்வையும் தருகிறது என்று நடிகை இனியா கூறியிருக்கிறார்.





