- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகைகிட்ட குழந்தை பெத்துக்க முடியுமா? ஓட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்குமா? - நடிகர் விஜயை கிழித்து...

நடிகைகிட்ட குழந்தை பெத்துக்க முடியுமா? ஓட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்குமா? – நடிகர் விஜயை கிழித்து தொங்க விட்ட மூத்த நடிகர் சிவக்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் நாகேஷ் போன்ற திரை ஆளுமைகளுடன் நடித்த மூத்த கலைஞர் நடிகர் சிவக்குமார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று நடிகர் சிவக்குமார் கலந்துக்கொண்டார். அப்போது நிருபர்களிடம் சிவக்குமார் கூறியதாவது, அனைவரும் வாழ்க்கையில் கடினமாக உழையுங்கள். இந்த உலகத்தில் எல்லாம் பெற்றவர் என்பவர் யாருமே கிடையாது.

நடிகர் நாட்டை ஆளலாம் என்று இந்த உலகத்திற்கு நிரூபித்தவர் எம்ஜிஆர். அப்படி ஒரு நடிகர் இனிமேல் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த நாட்டை ஆட்சி செய்தவர் எம்ஜிஆர். ஆனால் அவருக்கு வாரிசு இல்லை. உலகத்திலேயே பெரிய நடிகர் சிவாஜி கணேசன். அவரை மாதிரி இன்னொருவர் இனி பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவரே அரசியலுக்கு வந்து தோற்றுவிட்டார்.

- Advertisement -

நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள். கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை வைத்து சந்தோசமாக இருங்கள். இன்னொருவருடன் ஒப்பீடு செய்யாதீர்கள். நான் காமராஜர் காலத்திலேயே முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்தேன். அந்த வாய்ப்பு தவறிவிட்டது என்றார். வீட்டு உணவு பிடிக்குமா ஹோட்டல் உணவு பிடிக்குமா என்று கேட்ட செய்தியாளர் கேள்விக்கு நடிகர் சிவக்குமார் கூறியதாவது, இந்த கேள்வி மனைவி பிடிக்குமா அல்லது நடிகை பிடிக்குமா என்று கேட்பது போல உள்ளது.

மனைவி இல்லை என்றால் சூர்யா கார்த்தி எல்லாம் எப்படி பிறந்திருப்பார்கள்?
நடிகைகளிடம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? வீட்டு உணவு நிரந்தரம். ஒரு மாறுதலுக்காக வேண்டுமானால் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடலாமே தவிர தினமும் ஹோட்டலில் சாப்பிட்டால் உடலில் பல பிரச்சனைகள் வரும். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு நான் ஒரு பிடி பழைய சோறு கொய்யா பப்பாளிப்பழம் சில துண்டுகள் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.

- Advertisement -

இவைதான் எனது இளமைக்கு காரணம். தினமும் 7 மணி நேரம் தூங்குங்கள். நேரத்துக்கு உணவு அருந்துங்கள். நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். உயிர்வாழ காற்று தண்ணீர் மிகவும் அவசியம். அதற்குப் பிறகுதான் உணவு என்றார். எல்லா நடிகர்களும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. நடிகையை விட மனைவிதான் முக்கியம் என்று நடிகர் விஜயை தாக்கி மூத்த நடிகர் சிவகுமார் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் குடும்பத்திலும் அரசியல் களத்திலும் பல சர்ச்சைகளில் விமர்சனங்களில் இப்போது சிக்கியுள்ளார். இந்த நிலையில் நடிகை முக்கியமல்ல, மனைவிதான் முக்கியம். ஓட்டல் சாப்பாடு நல்லது இல்லை என்று நடிகர் சிவக்குமார் பேசியிருப்பது நடிகர் விஜய் குறித்த கடும் விமர்சனமாகவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்