நடிகர் விஜய் நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ 90 சதவீதம் முடிந்துவிட்டது. இப்போது சென்னை தாம்பரத்தில் வேகமாக ஷூட்டிங் நடந்து வருகிறது. அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கப்படுகிறது.
நடிகர் விஜய் ஏற்கனவே அரசியல் வருகையை தெளிவாக அறிவித்து விட்டார். அதனால் படப்பிடிப்பை முடித்த கையோடு அவர், தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி பணிகளில் மிகவும் பிஸியாகி விடுவார். அதனால் கோட் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் படக்குழு மூலமாகவே வெளியே வரும். படம் ரிலீஸ்தான் தீபாவளிக்கு தள்ளிப் போகும் என்றும் கூறப்படுகிறது.
கோட் படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளை இலங்கையில் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு சென்றால் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மற்றும் அவரது குடும்பத்தினர் விஜயை நேரில் சந்திக்க இருப்பதாகவும், இதை வைத்தே பெரிய அரசியல் பண்ண திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது.
அதுமட்டுமின்றி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ள விஜய், ராஜபக்ஷேவை சந்திப்பது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவு மற்றும் அவப்பெயரை உண்டாக்கும் என்பதால், கட்டாயம் அதை தவிர்க்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இலங்கையில் ஷூட்டிங் என்பதையே படக்குழு தவிர்த்து விட்டது.
கோட் படத்தின் ஷூட்டிங் இதுவரை சென்னை, பாண்டிச்சேரி, ஐதராபாத், ஆப்பிரிக்கா, துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட நிலையில், அடுத்து லொக்கேஷன் எங்கு பார்ப்பது என்பதில் படக்குழுவுக்கு குழப்பம் நீடித்தது, ஏனெனில் கடைசி வரை இலங்கை என்று முடிவு செய்திருந்த நிலையில், இப்போது திடீர் மாற்றம் செய்யப்பட்டது, படக்குழுவுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோட் படத்தின் மீதமுள்ள 2 ஷெட்யூல்களை ஷூட்டிங் செய்வதற்காக கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படக்குழு ரஷ்யா செல்கிறது. ரஷ்யாவில் தான் கிளைமேக்ஸ் உள்ளிட்ட இதர காட்சிகளையும் எடுக்க இயக்குநர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். ரஷ்யா போன்ற நாடுகளில் கிளைமேக்ஸ் என்றால், அது வேற லெவலில் இருக்குமே, என விஜய் ரசிகர்கள் இப்போதே பெருமையாக பேச ஆரம்பித்துவிட்டனர்.





