- Advertisement -
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் கடந்த 15ம் தேதிக்கு திரைக்கு வந்தது. படம் வெளியாகி 17 நாட்களில் இந்த படம் 760 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் மழை கொட்டியுள்ளது. இந்த நிலையில் தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜெயிலர் 2 படம் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த ஒரே தமிழ் படம் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.





