- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்ரம், சிவகார்த்திகேயன் விட சூரி பெரிய நடிகரா? இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளதே? ஆச்சரியப்பட்ட...

விக்ரம், சிவகார்த்திகேயன் விட சூரி பெரிய நடிகரா? இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளதே? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சூரி. இந்த படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் ஒரு காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சூரி பிரபலமானார். ஆனால் அதற்கு முன்பே சில படங்களில் சில காட்சிகளில் சூரி நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடிக்குழு படம்தான் அவருக்கு நல்ல அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து ரஜினி விஜய் அஜீத்குமார் சூர்யா தனுஷ் விக்ரம் ஜெயம் ரவி சசிக்குமார் விஷ்ணு விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் காமெடி ரோலில் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் சீமராஜா மனம் கொத்திப் பறவை போன்ற பல படங்களில் இரட்டை நாயகர்களில் ஒருவர்போல சூரி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிடைத்த வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி இடத்துக்கு காமெடி நடிகராக முன்னேறிய சூரியை, தனது விடுதலை படத்தில் நாயகனாக்கினார் இயக்குனர் வெற்றிமாறன். குமரேசன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் சூரியின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

விடுதலை படத்தை தொடர்ந்து சூரி நடித்த கருடன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பிறகு கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சூரி இப்போது மாமன் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் முக்கிய கேரக்டரில் லப்பர் பந்து நடிகை சுவாசிகா நடித்திருக்கிறார். கருடன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கோடை கால வெளியீடாக இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கவே பிரபல ஓடிடி நிறுவனங்கள் தயங்குகின்றன. மிக குறைந்த விலைக்கு கேட்கின்றன. சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி, சியான் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படங்கள் இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை ஆகவில்லை. ஆனால் சூரி நடித்த மாமன் படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் அதிக விலை கொடுத்து டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கிய தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

சற்று முன்